அரசியல் அதிகாரத்தின் அல்ப புத்தி

October 25, 2022

அரசியல் அதிகாரத்தின் அல்ப புத்தி

பத்மினி அர்ஹந்த்

அதிகாரம் தன்னிடம் இருப்பதை அகோரமாக பயன் படுத்துவது அரசியலின் அல்பத்தனமாகும்.

அல்ப புத்தியுள்ள அதிகாரம் தன்னை மீறி எதுவுமில்லை என்ற அல்ப சிந்தனை பல தடவை தவிடுபொடி ஆகியது இன் நாள் வரை நடக்கும் நிகழ்ச்சி.

அப்படி இருக்கையில், இறைவனை ஆழம் பார்ப்பது அதிகாரத்தின் பிம்பத்தைத்தான் பிரதிபலிக்கிறது.

அரசியல் என்ற ஜம்பத்திற்க்கு இவ்வளவு அகம்பாவம் இருந்தால்,

பிரபஞ்சத்தையும் படைத்து, காப்பது, தீமையை அழிப்பது என்ற பல்வேறு ஈடு பாடுகளில் செயல் படும் இறைவன்,

அதோடு ஆகாயம், அனல், மணல், நீர், காற்று ஐம்புலன்கள்          ஆகிய பஞ்ச பூதத்தை தன் ஜடாயுதத்தில் அடக்கி வைத்திருக்கும் அந்த ஆதிபகவன் இந்த அல்ப அரசியலின் அதிகார பிம்பத்தை தகர்க்க முடியாது என்ற தப்பு கணக்கு எவ்வளவு பெரிய முட்டாள் தனமாகும்.

அரசன் அன்று கேட்டால் தெய்வம் நின்று கேட்க்கும்.

இப்படிக்கு,

பத்மினி அர்ஹந்த்

Comments

Got something to say?

You must be logged in to post a comment.