பொங்கல் நல் வாழ்த்துக்கள்! தமிழ் தேசியம் 

January 14, 2019

பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

பத்மினி அர்ஹந்த்

தமிழ் நாட்டின் விவசாயிகள் மற்றும் தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திரு நாளையொற்றி அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

அகில இந்தியாவில் ஏழை விவசாயிகளின் துயரங்கள் நீங்கி அவர்களுக்கு நல்ல அறுவடை, மழை, வளர்ச்சி, பொருளாதார நிலைமை உருவாக இறைவனின் ஆசி பெற வேண்டுகிறேன்.

நன்றி

வணக்கம்

பத்மினி அர்ஹந்த்

———————————————————

தமிழ் தேசியம் 

பத்மினி அர்ஹந்த்

தமிழ் தேசியம்  என்ற பிரச்சாரம் தமிழ் நாட்டிற்கும் சகல மக்களுக்கும் பெரிய தீமையை உருவாக்கும். அதன் பிரதிநிதி நோக்கம் ஏறு மாறாக இருக்கும் பட்சத்தில் இவ்வகை கொள்கை மற்றும் சிந்தனைகள் தமிழ் இனத்திற்கும் இந்தியாவிற்கும் பாதகமாகும். முக்கியமாக இவ்வாறு பிரச்சாரம் செய்பவர்களின் செயல்களையும் முரண் பாடாகயிருக்கும் அவர்களின் கருத்துக்களையும் நன்றாக பரிசீலம் அதாவது கூர்ந்து ஆய்வு செய்வது அவசியம். ஏனென்றால் இப்படி சமூதாயத்தைப் பிரிப்பவர்கள் தீய உறுப்பினர்களின் தூதுவர்கள் ஆயினும் தீயவர்களை விமர்சனம் செய்வது போல் நடித்து அவர்களின் சேவகர்களாகவும் அடிமையாகவும் இருப்பவர்கள்.

இவர்களின் பேச்சில் எதிர் மாறாக கூறிய விஷயங்கள் இவர்களின் சுய ரூபத்தை காண்பிப்பது இவர்களுக்கே தெரியவில்லை. இது தீங்கு செய்யும் நபர்களின் கோரிக்கை ஆயினும் இவ்வாறு இழைஞரை பணம் புகழ் என்ற போதையில் மயங்க வைத்து மக்கள், நாடு, தேசம் பார்க்கப் போனால் உலகத்தையே ஏமாற்றும் சதிகார கும்பலைச் சேர்ந்தவர்கள். இவர்களின் கெட்ட எண்ணம் இவர்களை பாதிக்கும்.

தன் இழிவை நோக்கி செல்லும் வேகத்தில் சமுதாயத்தில் பிரிவு ஏற்படுத்துவது இவர்களுக்கு ஒரு பெரிய சாதனையென்று நினைப்பு. தீயவர்களின் அழிவு காலம் நெருங்கிய கட்டத்தில் தற்ச்சமயம் யாரையும் தனது வசப்படுத்தி அவர்களின் குறுகிய மனப்பான்மை வேறுபாட்டை சமத்துவம் என்று நாடகம் போடும் பாணி இவரின் ஏற்ற தாழ்வு கொள்கையையும் செயலையும் நிரூபிக்கிறது.

தன் ஜாதியை பெயருடன் குறிப்பிட்டு அதே மூச்சில் ஜாதியை ஒழிப்பது பற்றி பேசுவது இத்தகைய நபரின் போலி வேடத்தை பொது மத்தியில் காணப்படுகிறது. கலி காலத்தில் காசை வீசினால் நூறு வேசி. அதே போல் இந்த மாதிரி இழைஞர் மற்றும் இந்திய திரையுலகம், சில பிரபல திரையுலக நபர்கள் அயோக்கியர்களின் துர் விவகார சாதனமாக உதவுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் தீய குறிக்கோள் தோல்வியைத்தான் வழங்கும். அதோடு மக்கள், நாடு, தேசத்திற்கு துரோகம் செய்பவர்களின் கெதி என்னவென்று வரலாறு சாட்சியாகும். அறிவுள்ளவர்கள் நேர்மையானவர்கள் கல்லம், கபடம், வஞ்சகம், சூழ்ச்சி ஆகியவையில் ஈடுபடுவதில்லை. முக்கியமாக தன் மனசாட்சிக்கு விரோதமாகவும் செயல்படுவதில்லை.

பித்தளையை எவ்வளுவு பளபளப்பாக்கினாலும் அது  தங்கமாகாது. பித்தளை பித்தளைத்தான் தங்கம் தங்கமே.

தமிழ் தேசியம் என்பது அழிந்து கொண்டிருக்கும் இலுமினாட்டி தத்துவத்தின் தூறலாகும். இத்தகை வேண்டா விவாதங்களை கிளப்புவர்கள் படு முட்டாள் மற்றும் சுய நலவாதிகள். பிறருக்கு மோசடி கெடுதல் செய்பவர்கள் நிலைமை அவரவரின் கேடு காலத்தின் அறிகுறியாகும்.

இந்தியாவில் தற்போது தன் சுதந்திரத்தை பயன் படுத்துகிறவர்கள் தேசிய கொடியோ இல்லை பாடல் அதை விட்டால் வந்தே மாதரம், பாரத மாதா கி ஜெய் என்ற பழக்கத்தை வற்புறுத்துவது சரியல்ல என்ற மனப்பான்மை உள்ளவர்கள், அதே போல் என் விருப்பத்தையோ அல்லது மறுப்பை ஏற்றுக் கொள்வதில்லை. அப்படி என்றால் அவர்களுக்கு ஒரு நியாயம் உள்ளது எனக்கு அது கிட்டாதென்று அவர்கள் செயலில் காணலாம்.

நான் பல முறை கூறிய வாக்கை அதாவது எனக்கும் திரையுலகம், விளையாட்டு, பொழுது போக்கு, அரசியல் பேர்வழிகளுடன் மற்றும் எவரோடும் எந்த சம்பந்தம் தொடர்பில்லை என்பதை நிராகரித்து வேண்டுமென்றே இலுமினாட்டியின் அடிமைகள் என்னை அதே தோரணையில் காண்பிப்பது அவர்கள் அந்நியர்களுக்கு அடிமை என்பதை வெளிப்படுத்துகிறது.

இது இலுமினாட்டி குழு நடத்தும் நாடகம். இதில் பங்கேற்றுபவர்களின் முடிவு காலம் உறுதி. யாரொருவர் பிறரின் சுய உரிமை உணர்வுகளை அலட்சியம் செய்கிறார்களோ அவர்கள் மனித குலத்தைச் சேர்ந்தவர்களல்ல. அதே போல் இலுமினாட்டி போன்ற தீய சீரழிந்த கூட்டணியும் அவர்களுக்கு கட்டுப்பட்டு ஒடுங்கி நடக்கும் எந்த அரசும் உண்மையை பேசி நீதி நியாயத்தை கேட்பவர்களை துன்புறுத்துவது ஒரு கோழைத்தனம் மற்றுமில்லம்மாள் சர்வாதிகாரமாகிறது.

எல்லாவற்றுக்கும் முற்று புள்ளியுள்ளது. முக்கியமாக இந்த அநியாயம் அட்டூழியத்திற்கும் முடிவு வந்து விட்டது. இதை யாராலும் தவிர்க்க முடியாது. இது சத்தியம்.

தன் கர்ம வினைகளிலிருந்து யாரும் தப்ப முடியாது. அவரவர் கர்ம பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். இதுதான் இயற்கையின் நீதி. இதில் ஆண்டவன் கூட தலையிட இயலாது. இதை அறிந்தவர்கள் அதன்படி தன் பிறவியை வீண் போகாமல் தனது ஆத்மாவின் விமோச்சனத்திற்க்காக யாருக்கும் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்ய தயங்குவார்கள்.

இவர்கள் அறிய வேண்டியது – தன்னப்பன் தன்னைச் சுடும் உரட்டியப்பன் வீட்டைச் சுடும்.

இப்படிக்கு

பத்மினி அர்ஹந்த்
எழுத்தாளர், தொகுப்பாளர்
பத்மினிஅர்ஹந்த்.காம்
ப்ரக்ரிதி.பத்மினிஅர்ஹந்த்.காம்