அரசியல் புதிர் – Political Conundrum

August 12, 2016

எழுத்தாளர், ஆசிரியை மற்றும் தொகுப்பாளர்,

பத்மினி அர்ஹந்த்

வணக்கம்.

தமிழர்கள் உட்பட உலகத்தின் குடி மக்கள் எல்லோருக்கும் சில விஷயங்கள் பற்றி என் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். தற்கால உலக சூழ்நிலை சாதாரண மக்களுக்கு அதிக வாய்ப்பு இல்லாத பட்சத்தில் வறுமையும் நிறைய துன்பங்களையும் அவர்கள் சகித்து கொண்டிருக்கின்றனர். இதே மாதிரி மத்திய வருமான உறுப்பினரும் அவதிப் படுகின்றனர். அரசு மக்களின் பிரச்சனைகளை முழுமையாக தீர்க்காவிட்டாலும் அதை குறைப்பதற்கு வழியை தேடலாம். ஆனால் அதற்கு அக்கறையும் ஆலோசனையும் தேவை. இது இரண்டும் காணவில்லை. காரணம் – அரசாட்சியில் தலைமை புரிபவர்கள் இதை முக்கியமாகக் கருதுவதில்லை.

உதாரணமாக – பாரதத்தின் தமிழ் நாட்டில் மக்கள் அவதி பெரிதாகினும் முதல் அமைச்சர் தன் கட்சியின் விவகாரங்களை கண்காணிக்கவும் கட்சியிலுள்ள அதிபர்களை விளக்கவும் தண்டிக்கவும் நேரம் சரியாகிறது. இந்த சம்பவங்கள் கட்சியின் அலுவலகத்தில் வைத்து கொண்டாலும் ஒரு பக்கத்தில் இது அரசியல்வாதிகளின் குடும்ப பிரச்சினை என்று போய் விடும். ஆனால் இதை பிரசங்கம் செய்து நாடாளும் மன்றத்தில் நாடகம் நடப்பதில் மும்மரமாகியுள்ளார்.

திரை உலகத்திருந்து அரசியலுக்கு வந்ததினாலோ படம் காட்டும் பழக்கம் முத்திப்போனதில் ஆச்சரியமில்லை. மாநிலத்தின் நிலமையோ அல்லது பொது மக்களின் வேண்டிய வசதிகளைக் கவனிப்பதற்கு இவர்கள் கையில் ரொக்கத்தை திணித்தால்தான் எதுவும் நடக்கும். இவர்களுக்கு மீண்டும் மீண்டும் வோட்டை போட்டு சிம்மாசனத்தில் அமர்த்தி வைக்கும் பாமர மக்களும் நகரத்தில் வசிக்கும் செல்வந்தர்களும் அவர்களுடைய சுயநலன் நீடிக்க இந்த மாதிரி ஊழலில் மூழ்கிய பேர்வழிகளை ஆண்டாண்டு காலம் பதவியில் உட்கார அனுமதிப்பதால் மற்றவர்களுக்கு மிகுந்த அல்லல் அவஸ்தை உருவாகியுள்ளது.

இந்த கட்சியைத் தவறினால் எதிர்க் கட்சி இவர்களின் இராட்டை சகோதரர்.

இந்த நிலமை தமிழ் நாடு மற்றபடி எங்குமே தர்ம சங்கடமாகியுள்ளது. திரை உலகம், செய்தி, பத்திரிக்கை, வானொலி, டெலிவிஷன் யாவும் இவர்களின் கைவசம். இவர்களை புகழ்வதும், வாழ்த்துவதும் ஆக மொத்தம் இவர்களின் கவசமாகியுள்ளார்கள்.

உண்மையை மறைத்து பொய்யை மெய்யாக்குவது சூடான சாம்பார் சாதத்தில் நெய் விட்டது போல் ஆகி விடுகிறது. இவர்களுக்கு இது சர்வ சாதாரணம். செய்தி நிலையங்கள், திரைப்படம் ஆகியவைகள் மக்களின் குரலை நிராகரித்து அரசியலின் யந்திரமாக இருப்பினும், உண்மையை பேரம் பேசி விலைக்கு வாங்கி விடுகின்றனர்.

விலை வாசி புயல் போல் படர்ந்து வானத்தைத் தொட்டாலும், அது மக்கள் விதியாகிவிடுகிறது.

தமிழ் நாடு திரை உலகம் மற்ற நாட்டில் தமிழர்களின் கீழான ஸ்தானத்தையும், குறைகள், வேறுபாடு என்ற பல விதமான கஷ்டங்களை இந்தியாவிற்கும் உலகத்திற்கும் உணரவைப்பது பெருமையாக இருந்தாலும், தமிழ் நாட்டில் வாழும் குடி மக்கள் குடி நீர் இல்லாமல், வசிக்க இடமில்லாமல், மாணவர்கள் படித்து பட்டதாரி ஆகியும் வேலைக் கிடைப்பது குதிரை கொம்பாக இருப்பதை செய்தி, பத்திரிக்கை, டெலிவிஷன், திரைப்படம் என்ற பிரபல மையங்கள் மூலம் அரசியல் நிபுணர்கள், அறிஞர், மற்றும் கலைஞர் ஆகியோர்க்கு எடுத்து உரைத்தால் அது நிலவரத்தைக் கொஞ்சம் சீர் திருத்தலாம். ஆனால் இது நடக்கிற விஷயமில்லை.

நான் மேல் பகுதியில் கூறியது போல், தொடர்பு ஊடகங்கள் (Communication Media) ஊழல்வாதிகளுக்குச் சங்கு ஊதுவது அவர்களுக்கு சாதகமாகியுள்ளது. தமிழ் நாட்டில் சமீபத்தில் மூலைக்கு மூலை குடி நீருக்குப் பதில் மதுக் கடைகள் டாஸ்மாக் என்ற முறையில் குடியை கெடுக்கும் குடி பழக்கத்தைப் பரவிய அரசியல் கட்சிக்கு மக்களின் எதிர்ப்பு எந்த மாறுதலையும் தரவில்லை. அதற்கு ஏறு மாறாக மீண்டும் அந்தக் கட்சியும் அதன் தலைவியையும் திரும்ப ஆட்சிக்குக் கொண்டு வந்தது குடி அரசின் மிக பெரியத் தோல்வியாகும்.

மற்ற கட்சிகளும் இந்த வகையில் ஒன்றுதான். இந்த சீர் குழைந்த சிக்கல்களை நான் எடுத்துக் கூறினால், அவர்கள் தன்னிடமிருக்கும் பிரச்சார ஆயுதம் அதாவது மீடியா வழியாக தாக்குவதில் திறமை வாய்ந்துள்ளார்கள். தன்னைக் காப்பாற்றவும், தன் பதவியைப் பாதுகாப்பதும்தான் அவசியமாகியுள்ளது.

இது தமிழ் நாடு மற்றுமில்லை, இந்தியாவிலும், உலக பகுதிகளில் நடந்து வரும் அரசியல் வழக்கமாகி விட்டது. ஆனால் தமிழ் நாடு அரசியல் தரம் கெட்டு, மதி இழந்து குடி மக்களை குடி பழக்கத்தில் திசை மாற்றியது மனித குலத்திற்குத் தீங்கும் இழப்பையும் ஏற்றியுள்ளது. இதையெல்லாம் விட இவர்களை தட்டிக் கேட்பதில்லாமல், இவர்களுக்கு பூமாலை சூடி இவர்கள் படத்திற்கு முன்னாள் திருஷ்டிக் கழிப்பது மனித மூடத்தனம், பலஹீனம் தெளிவாகிறது.

கண் விழித்திருந்தும் பாதைத் தவறினால், அது மூலை உபயோகத்தில் குறையாகும்.

இத்துடன் இந்த சங்கதி முடிகிறது.

என்னிடமிருந்து மக்கள் சமுதாயம் சம்பந்த சர்ச்சை உங்கள் முன்னாள் விரைவில் காணலாம்.

மீண்டும் தொடர்பு கூடிய சிக்கிரமாகும்.

எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இப்படிக்கு,

பத்மினி அர்ஹந்த்

 

இந்தியா – தமிழ் நாடு அரசியல்

May 26, 2015

Please click on the above link for the audio feature. ஆடியோ அம்சம் மேலே கிளிக் செய்க.

எழுத்தாளர் – பத்மினி அர்ஹந்த்

தமிழ் நாட்டின் அரசியலை திரை படமாகக் கருதி குடி மக்களை ஏமாற்றுவது கடுமையான தண்டனைக்கு ஆளாகிறது. அரசியலை ஒரு நாடகம் போல் நடத்தி திரை பட நடிகையை நடிக்க வைப்பது பெருமையான காரியம் அல்ல.

இந்த தெருக் கூத்து ஜன நாயக ஸ்தானத்தை அழிப்பதுமில்லாமல் மக்களின் அறிவை ஏளனம் செய்வதாகும்.

ஊழல் மற்றும் கொலை, கொள்ளை, கள்ள நோட்டு பதித்து கள்ள வோட்டு மூலம் பதவிக்கு வந்து அதிகாரத்தை தவறாக பயன் படுத்தி மாநிலத்தை சுய ராஜியமாக்கி தன்னுடைய அஹங்காரத்தை தெரியப்படுத்தும் குற்றவாளிகளை முதல் அமைச்சராக அமர்த்துவது சீரழிவாகும்.

தமிழ் நாடு முன்னேற்றம் வழி – பல ஆண்டு காலம் மற்றும் தற்சமயம் ஆட்சி புரிந்து வரும் அரசியல் கட்சிகள், கட்சியின் அதிபதி, சகல உருபினருடன் நிராகரித்து, அதற்கு பதில் மக்கள் அவரவர் தொகுதியில் நேர்மை, நீதி, ஒழுக்கம், அறிவு, திறமை, அனுபவம் மற்றும் கண்ணியமான நபர்களை தேர்ந்தெடுப்பது அவசியமாகும். பிறகு மக்கள் குறிப்பிட்டவர்கள் ஒன்று சேர்ந்து கட்சியை உருவாக்கி தேர்தல் சீர்திருத்தம் நிறை வேற்ற வேண்டும்.

இந்த விஷயத்தில் மக்கள் கவனம் தேவை. தமிழ் நாடு மற்றும் பாரதம் முழுதும் அரசியல் கட்சிகள் அந்நியர்களின் பிரதிநிதி. ஆகையால் இவர்கள் மாநிலத்திற்கும் தேசத்திற்கும் துரோகம் செய்வதில் சிறிதும் தயங்குவதில்லை. இப்படி இருக்கையில், மக்கள் நலனிற்காக இங்கு வழங்கப்படும் எந்த யோசனையையும் தன் சுயநலத்திற்காக உபயோகிக்க பல பேர் வருவதில் சந்தேகமில்லை. அதனால் மக்களின் பகுத்தறிதல் மிகவும் வேண்டியது.

அரசியல் வாதிகளுக்கு தேர்தல் ஒரு நுழைவு, தன்னுடைய சர்வாதிகாரத்தை மக்கள் மீது சுமத்துவதும், பதவியில் இருக்கும் பொழுது மாநிலத்தின் வருமானத்தையும், மக்களின் வரிகளையும் சூறையாடும் சந்தர்ப்பத்தை இவர்கள் வீண் போக விடுவதில்லை.

மற்றபடி நீதி வழக்கையும் கூட மிரட்டல் லஞ்சம் மூலம் தனக்கு சாதகமாக திருப்பி மீண்டும் பதவிக்கு வருவது வழக்கம் ஆயினும், இப்படிப்பட்ட அரசாங்கம் பதவி, புகழ், பொருள் பேராசையின் அடிமையாக இருக்கையில், தனக்கு தகுந்த நடவடிக்கையும் கடை பிடிக்கிறார்கள். இவர்களின் ஒவ்வொரு செயலிலும் தன்னுடைய ஆட்சியை நீடிக்கும் ஆர்வத்தைக் காணலாம்.

தானம், தருமம் நடப்பது மக்களின் சொத்தை உபயோகித்து அதையும் வோட்டாக மாற்றி அரசாளும் வெறியை பார்க்க முடிகிறது.

உண்மையாக தேசம் அல்லது மாநிலம் மேல் பற்று உள்ளவர்கள் முதலாவது – ஊழல், சட்டத்தை பேரம் பேசி வாங்குவது, உத்தமி வேடம் போட்டு மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள். இரண்டாவது – அரசியலில் சேர்ந்த நாள் முதல் இந்நாள் வரை கொள்ளையடித்த மக்களின் பணத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைத்து, பதவி மோகத்தை துறந்து தன்னுடைய சொந்த செல்வத்தை மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் செழிப்பதிர்க்காக கொடுப்பார்கள். மூன்றாவது தெய்வங்களையும் கையாள இவர்கள் சலைப்பதில்லை.

இந்த தரம் கெட்டவர்கள் மத்திய கிழக்கு அதாவது மிடில் ஈஸ்ட் நாடுகளில் உள்ள கொடூர ஆட்சியின் பண்பாட்டை தமிழ் நாட்டில் அமலாக்குகிறார்கள். மக்களை அடக்கி ஒடுக்கி போலீஸ் என்கௌன்ட்டர் இல்லாவிட்டால் பெண்களையும் குடும்பத்தையும் துன்புறுத்தும் முறைகளை பின்பற்றுகிறார்கள்.

பிரஸ், பத்திரிக்கை பற்றா குறைக்கு தனது டெலிவிஷன் செந்நெல் வழியாக வதந்தியும், தன்னை புகழ்ந்து பொய்யான நிகழ்ச்சிகளை காண்பித்து மக்கள் சிந்திக்க முடியாதபடி மூலையையும் தாக்குகிறார்கள்.

இதன் காரணம் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு நபர்கள், தொழில் அதிபர்கள், மற்றும் அரசியல்வாதிகளை மக்கள் அளவிற்கு மீறி மரியாதையும் சேவையும் செய்து அவர்களை மனிதர்கள் இன்றி தெய்வாமாக்கி இறைவனை அவமதிப்பதால் இந்த நிலமை உருவாகியுள்ளது.

அவர்கள் தன்னையே பூமியின் கடவுளாக நினைப்பது மக்கள் கொடுத்த சலுகையும் அனாவசிய ஆதரவின் விளைவாகும். இதோடு அரசியலில் கட்சியின் தலைவர், தலைவிக்கு குடை பிடிக்கவும், செருப்பு துடைப்பவறும்தான் கட்சியில் சேர்க்க படுவதினால், கட்சிக்காரர்கள் கட்சியின் தலைமை புரிபவர்களுக்கு ஏகப்பட்ட பட்டங்கலும், விருதுகலும் கொடுத்து தரை மட்டத்தில் இருப்பவர்களை வானத்தில் வைக்கிறார்கள்.

இந்த பிரச்சனைகளுக்கு பரிகாரம் – மேல் பகுதியில் அறிவித்தப்படி எல்லா கட்சிகளையும் விலக்கி, தன் சுக போகங்களை கருதாமல் மக்களுக்கு பனிவிடை செய்வதே லட்சியமாக உள்ளவர்களையும், நல்ல நோக்கம், நாணயம் அதோடு தூரத்து கருத்து அறிந்தவர்களை கொண்டு வருவது நன்மையாகும். 

முக்கியமாக உள் நாடில்லும் சரி அந்நியர்களுடன் கூட்டு சேர்ந்து சதி செய்யும் நரிகளை தள்ளி வைப்பது எல்லா வகையில் மேலாகும்.

அரசியலின் மூன்று கிளை அலுவலகம் பதவிகள் நிரந்தரமாக நீடிக்காமல், கால எல்லை ( டெர்ம் லிமிட்) அறிமுகப்படுத்துவது முன்னுரிமை. இல்லையென்றால் தன் இஷ்டப்படி நான்காவது, ஐந்தாவது தடவை முதல் அமைச்சராக அமர்ந்து கொண்டு என்றைக்கும் தீராத பதவி பித்து பிடித்தவர்கள் மக்களின் ஏழ்மை, துயரம் மற்றும் கல்வியறிவின்மையை தேர்தலில் வெற்றிக்காக மறுபடியும் உபயோகிப்பது ஐதிகமாகி விட்டது.

தேர்தல் திருப்பம் ஆகும் வரையில், தேர்தலில் பங்கு கொள்ளாமல், இருக்கிற எல்லா கட்சிகளையும் அடியோடு புறக்கணிப்பது மக்களின் அருமையையும் சக்தியையும் தெளிவு படுத்தும்.

பதவிக்காக மோசடி செய்வது அரசியலின் தனிச்சுதந்திரமாகி, அநியாயம் அட்டகாசம் பெருகிக்கொண்டே இருக்கிறது. சட்டம் என்பது பொது மக்களுக்கு மற்றும் நியமிக்கப்பட்டதால் குற்றம் செய்பவர்கள் அரசியல் மற்றபடி பெயர் வாய்ந்தவர்கள் கூட்டணியை பாதிப்பதில்லை. இதற்காகவே ஊழல் தடுப்பு பிரச்சாரம் இவர்களுக்கு சம்மதமில்லை.

எல்லா விதத்தில்லும் இப்பொழுது நடக்கிற சம்பவங்கள் குடி அரசின் பெயரில் மக்களின் குடியை கெடுக்கும் ஆட்சிகள் துணிச்சல் பெறுவது புது தில்லி அரசியல் மற்றும் அந்நியர்கள் சாம்ராஜ்யம் தூண்டிய கை வரிசையாகும்.

இதற்க்கு முற்றுபுள்ளி வைப்பதில் தான் மக்கள், நாடு தேற முடியும். இல்லாவகையில் ஆணவம், அகம்பாவத்தோடு ஊழல் அஸ்திவாரமாக கொண்ட அரசாங்கம் நீடிப்பது மக்கள் வேதனையும், நாட்டிற்கு சேதமும் தான் அதிகரிக்கும்.

பிறருக்கு அக்கறை இல்லாவிட்டாலும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒத்துழைப்பில் அந்தந்த ஜில்லா, மாவட்டம் பொது சந்திப்பு ஏற்பாடு செய்து மக்கள் சேவைக்காக நீதி, நேர்மை, பண்பு, அறிவாற்றல், அகிம்சை, அமைதி, சமாதானம், விவகாரங்களை தீர்மானம் செய்ய வேண்டிய சாமர்த்தியம் மற்றும் துணிவு பெற்றவர்களை வேட்பாளராக தேர்ந்தெடுத்து அரசாங்கம் அமைக்கலாம்.

இப்பொழுது இருக்கும் கட்சிகள் அனைவரும் இதன் படி ஏற்கனவே இருப்பதாக அபிப்ராயத்துடன் மக்களை திரும்பவும் கண் கட்டி வித்தை காட்ட முன்னணிக்கு வருவார்கள். மக்கள் இவர்கள் வலையில் அகப்படாமல், புதிதாக கட்சி ஆரம்பம் செய்வது புத்திசாலிதனமாகும். புது தில்லி பாராளுமன்றம் அந்நியர்களுடன் உடந்தையாகி பொது மக்கள் கட்சி – உதாரணம் ஆப் போன்ற கட்சியை தமிழ் நாட்டில் அறிமுகம் படுத்தினால் – மக்கள் அதை ஏற்றுக்கொள்வது அறியாமையாகும்.

எப்படி பழையதை அகற்றி விட்டு புதிதாக எதையும் கொண்டு வருவதற்கு முயற்சி தேவையோ, அதே போல் தமிழ் நாட்டில் இந்நாள் வரை ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும் கட்சிகளை வேரோடு நீக்குவது மக்களக்கு சுதந்திரமாகும்.

ஆண்டவன் படைத்த உலகத்தில் எல்லா பிராணிகள், பொருட்களுக்கும் முடிவு இருக்கின்றன. அதே மாதிரி அரசியல் கட்சிகளுக்கும், ஆட்சியில் உள்ளவருக்கும் முடிவு காலம் இருப்பதை இவர்கள் மறுத்தாலும் அது நிச்சயம் நடந்துதான் தீரும். இவர்கள் முடிவை தாமதிக்கலாம் ஆனால் தடுக்க இயலாது.

தமிழ் நாட்டின் சரித்திரம் மாற வேண்டிய சமயம் வந்து விட்டதால், இதில் எந்த தடையும் போலி வேடத்தில் அதை தவறினால் சினிமா நடிகை நடிப்பில் வெற்றி காண முடியாது.

ஆண்டவன் விதித்த கட்டளையை மீறி எந்த நிமிடமும் மறைந்து போகும் மனித இனம் குறுக்கிட்டாள் அதன் வினையை அனுபவிக்க வேண்டி வரும்.

பூமி ஒன்று, மனித குலம் ஒன்றை எத்தனையோ பிரிவினை செய்கிற சமுதாயம் அரசியல் என்ற கூண்டில் சிக்கிக்கொண்டு தவிப்பது – அவர்கள் ஏற்றுக்கொண்ட தண்டனையாகும். ஏனனில் இதை கொடுப்பவர்கள் கோழைகள். அவர்களுக்கு மக்களிடம் பயம். 

தேர்தலில் அபகரித்த அதிகாரத்தை மக்கள் வருமான வரியில் நடத்துகிற போலீஸ் படை, நீதி மன்றம், மற்றும் பல வித நிறுவனத்தின் பின்னால் ஒழிந்து தன்னுடைய பாதுகாப்புக்காக மிரட்டுவது அவர்களின் பலவீனம். அதை மூடி மறைத்து மக்கள் அவர்களின் இரக்கத்திற்கு பயந்து வாழ வேண்டுமென்ற சூழ்நிலையை தந்திரமாக ஏற்படுத்தியுள்ளார்கள்.

நயவஞ்சகம், கள்ளம், கபடம் ஆகியவை மனிதர்களின் இருளாகும். இந்த இருட்டில் அச்சம் அதிகமாகி சிந்திக்கும் தன்மையை இழப்பதால் தீய செயலில் ஈடுபட்டு தன் பாவத்தை சேகரித்துக் கொள்கிறார்கள்.

இந்த பாதையில் செல்பவர்கள் மறப்பது – கர்ம வினைகள் யாரையும் விட்டு வைப்பதில்லை. அவரவர்கள் செய்யும் குற்றத்திற்கு அதன் பலனை தவிர்க்க சாத்தியம் இல்லை. இது சத்தியம்.

தமிழ் நாடு அரசியல் சகல கட்சிகளின் அத்தியாயம் இறுதியான முடிவு தமிழகத்திற்கு புதிய பிறவியை உண்டாக்கும்.

அனைவருக்கும் அமைதி உருவாக!

நன்றி

பத்மினி அர்ஹந்த்

பத்மினி அர்ஹந்த் அறிமுகம்: உண்மை வெளிப்படுத்தல் மற்றும் தெளிவுரைகள்

January 20, 2015

பத்மினி அர்ஹந்த்

உண்மை வெளிப்படுத்தல் மற்றும் தெளிவுரைகள்

வணக்கம். 

என்  பெயர்  பத்மினி  அர்ஹந்த்.  நான்  பத்மினி அர்ஹந்த்.காம் வெப்சைட்டின்  உரிமையாளர்,  ஆசிரியை  மற்றும்  தொகுப்பாளர்  என்ற ஸ்தானத்தில்  என்  கருத்தை  உங்கள்  அனைவருக்கும்  கூற  விரும்புகிறேன்.

முதலாக,  தமிழ் நாடு  உட்பட  அகில  பாரத தேச  மக்கள்  அறிய  வேண்டிய விஷயங்கள்  நிறைய  இருக்கின்றன.   நான்  தொடங்க  போவது  என்  அறிமுகம்.

ஏற்கனவே  அதை  செய்திருந்தாலும்,  மீண்டும்  விளக்கமாக  தெரிவிப்பது அவசியம். 

ஏனென்றால்  சம்பந்தா  சம்பந்தமில்லாத சூழ்நிலையை உருவாக்கி அனாவசியமாக குழப்பத்தை கிளறுவது அந்நியர்களுக்ககும்  இந்தியாவில் உள்ள அவர்கள் ஏஜென்டுக்கும் (முகவர்) ,பெரும் வேலையாக இருக்கிறது.

முன்னால் தமிழ் நாட்டின்  முதல்  அமைச்சர்  ஜெயலலிதாவோ, காங்கிரஸ்  தலைவி  சோனியா காந்தியோ,  அவர்  உதவியாளர் முன்னால் பிரதமர் மன் மோகன் சிங்க், தற்சமய பிரதமர்  நரிந்தர்  மோதியோ,  அல்லது  யாரும்,  எவரும்  உலகத்தின்  எந்த  பகுதியில்  வசித்தாலும்  அவர்கள் பத்மினி  அற்ஹந்த்  அல்ல.

அவரவர்கள்  சொந்த  வரலாறு ,  தோற்றம்,  குணம், பண்பு  என்று  எத்தனையோ குறிப்பிட்ட  சுயசரிதை  இருக்கையில்  மற்ற  வேடம்  போட்டு  மாற்ற  முடியாது.

எப்படி  நான்  அவர்கள்   இல்லையோ  அதே  மாதிரி  அவர்கள்  நானில்லை.  நான் அவர்களாக  இருக்க இயல்பில்லை. அதன் படியே  அவர்கள்  நானாக ஆவதற்கு  சாத்தியம்  இல்லை.

 இது  அந்நியர்கள்  பாரதத்தின்  தலை  நகரம்  மற்றும்  மாநில  அரசியலுடன் சேர்ந்து  நடத்துகிற  சதி.   குடி  மக்களை  ஏமாற்றும்  கை வரிசை.   இவர்கள் நடத்தும்  சூழ்ச்சி   நாடகம் இவர்களுக்கு  மட்டுமில்லாமல் எந்த  விதத்திலும்   உடந்தையாக  இருப்பவர்கள்  அனைவருக்கும்.  இது கடுமையான   வினையாகும்.  இது உறுதி.

தற்காலத்தின் அரசியல் அந்நியர்கள் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு அவர்கள் எட்டடி தாண்ட உத்தரவிட்டால் பாரதத்தின் மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளும் முக்கியமாக புது தில்லி ஆட்சியில் உள்ளவர்கள் பதினாறடி  தாண்டுகிறார்கள். 

இப்பொழுது நடக்கிற சம்பவங்கள் அந்நியர்கள் தலைமையில் பாரத மத்திய அரசும் மாநில ஆட்சியின் ஒற்றுமையினால் உருவாகிறது.

மக்கள் பேச்சு உரிமையோ அல்லது  ஈடுபாட்டிற்கு அரசின் பதில் போலீஸ் மூலமாக செமை அடியும், என்கொவுன்டரும்தான் கிடைக்கின்றன.

இதை தவிர அரசு தன் தனியான படையை – அதுவும் மிரட்டல், பெண்களை துன்புறுத்தும் கூட்டங்கள், கொலை ஆகியவற்றில்  அஞ்சாதவர்களை ஏவி விடவும் கொஞ்சம் கூட தயங்குவதில்லை.

உதாராணம்  – கூடங்குளம் நியூகிளியர் பிளான்ட் பிரச்சனை.

அதாவது நியூகிளியர் ரியாக்டரின் ஆபத்தை சிந்தித்து அங்கு வாழும் ஜனங்களுக்கு பயம்  கவலைகள் இருப்பின்னும், மாநிலம் மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து மக்களின் நிலமையை  சிறிதும் கருதாமல், அந்நியர்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதுதான் முக்கியமாகி விட்டது.

ஒரு ஐநூறு மக்கள் பங்கிட்ட பொதுகூட்டத்தில் முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா  ஐயையாயிரம் போலீஸ் படையை அனுப்பியதும் இல்லாமல்  சட்டத்தை மீறி தாக்குதலும் செய்ய உத்தரவிட்டார்.

மற்றபடி வாக்காளர்கள் அரசையோ அல்லது அரசியலின் ஊழல்களை வெளிபடுத்தினால் – அதற்கு தக்க தண்டனை விளங்க படுகிறது.  சில சமயம் உயிரையும் கூட இழக்கலாம்.

பாரதத்தின் அரசியல் – அரசியல் வம்சத்தை சேர்ந்தவர்களுக்கும், தொழில்  துறையிலிருந்தும், திரை உலகிலிருந்தும், விளையாட்டு அரங்கில்

பிரபலமான நபர்களுக்குத்தான் இடம் தரப்படுகிறது.  ஆக மொத்தம் செல்வந்தர்கள் அதிகராம்தான் நடக்கின்றது.

 அரசியலில் ஆட்சி குறைவாகவும் ஊழல்கள் அளவிற்கு மீறி இருப்பதால் – அகில தேசமும் வறுமையிலும், நோய், கல்வி குறைபாடு என்று பல விதமான சூழ்நிலையில் இருக்கின்றது. 

சில மாநிலங்கள் மற்றுமில்லை ஏன் நாடு முழுதும் பல கோடி மக்கள் குடி நீர், மின்சாரம், மருத்துவ மனை, பள்ளி, வசிக்க வீடு, சுகாதாரம்  என்ற அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் தவிக்கிறார்கள்.

அரசியல்வாதிகளோ தேர்தலில் வெற்றியோ அல்லது தோல்வி அடைந்தால் ஊழல் மூலம் சொத்து சேர்ப்பதில்தான் மும்மரமாக இருக்கையில், அவர்களிடம் வாக்காளர்களை பற்றி யோசிப்பதற்கு நேரமோ அக்கறையோ இல்லை.

அரசியல் கருப்பு பணம் சேர்க்கவும், நீதி வழக்கை பேரம் பேசி வாங்குவதும், கள்ள  நோட்டு  பதித்து கள்ள வோட்டில் பதவிக்கு வருவதும்,  அந்நியர்களுடன்  கூட்டணி சேர்ந்து மாநிலம், தேசம், மக்கள் யாவருக்கும் துரோகம் செய்வதற்கு ஒரு வாயிப்பாகியுள்ளது.

மேற்கொண்டு அரசியல் வாதிகள் தன்னுடைய குற்றங்களை மூடி மறைத்து உண்மை  பேசுபவர்களை இழிவுபடுத்தவே குறைந்த பட்சம் இரண்டு அல்ல ஐந்து சொந்த தொலைக்காட்சி  (டெலிவிஷன்) நெட்வொர்க் வதந்தி ஒளிபரப்பவே வைத்துள்ளார்கள்.

பற்றாக்குறைக்கு அரசியலுக்கு  தொழீல்துறையில் அதிக சம்பந்தம்.   லஞ்சம் கை மாறுவது  சர்வ  சாதாரணம்.  தன்  வியாபாரத்தை கவனிக்கவே நேரம் சரியாகி விடுகிறது.  அதனால்  ஆட்சி புரிவதற்கு சமயம்  கிடைப் பதில்லை.

அதோடு ப்ரஸ் மற்றும் கம்யூனிகேஷன் மீடியா (தொடர்பாடல் ஊடகம்)  அரசியல் கையில்தான் உள்ளது.

என்றைக்கு செய்தி, பத்திரிக்கை, சினிமா ஆகியவைகள்  அதிகாரத்தின் பிரச்சார இயந்திரம் ஆனதோ, அன்றைய  தினத்திலிருந்து நாடு ஜனநாயகம் அந்தஸ்தை இழந்து விட்டது.

பாரதம் சுதந்திர நாடு அல்ல.  இப்பொழுது அந்நியர்கள் கட்டளையுள்ள அரசாட்சி குடியரசு (டொமினியன் ரிபுப்ளிக்). 

இந்தியாவில்  சட்டத்தில் இருப்பவர்கள் அந்நியர்களின் பிரதிநிதியாகவும்  அந்நியர்களுக்கு பதிலாளாகவும்  பனி புரிகிறார்கள். 

அவர்கள் பேச்சை தட்டாமல் அடிமையாகி நாட்டையும் அந்நியர்களிடம் ஒப்படைத்ததில் சிறிதும் சந்தேகமில்லை.

இந்த  சங்கடத்தில்  சுதந்திர மற்றும் குடியரசு தினம் கொண்டாடுவது  கோலாகலம் ஆகினும்  அர்த்தமில்லாத நிகழ்ச்சியொரு  வேடிக்கை தான்.   

உள்நாட்டின் ஒத்துழைப்பில்லாமல் அந்நியர்கள் எந்த தேசத்தையும் கைவசம் பண்ண இயலாது.  இது இந்தியாவின் சரித்திரத்தில் உள்ளது.

அதுவும் நியூகிளியர் இந்தியா, அணு சக்தியுள்ள) நாடென்று சட்டத்தின் குழுவினர் பெருமை படும் மத்தியில், ஆட்சியை  அந்நியர்கள் கண்காணிப்பது நாட்டின் தரத்தை மட்டமாக  தெரிய  படுத்துகிறது.

பார்க்க போனால் நாட்டிற்காக தியாகம் செய்தவர்களின் பலன்களை இன்றைய அரசியல் இனம் மோசடி, கொலை, கொள்ளை, அநியாயம், அட்டூழியம், இன்னும் தீர விசாரித்தால்  தீவிரவாதிகளுடன்  நெருங்கிய உறவு காண்பது ஆச்சரியமில்லை.

மேற்கொண்டு அண்டர் வெர்ல்ட் கிரிமினல் சின்டிகேட்டுடனும் அரசியல் தொடர்பு  மிகவும்  சாதகமாகியுள்ளது.  முக்கியமாக தேர்தலின் செலவுகலை சமாளிப்பதில் சுலபமாகிறது.

இப்படிப்பட்ட நிலவரத்தில் நாடு முன்னேற்றமென்பது பெரிய கேள்விக்குறியாகும் (?).

தமிழ் நாட்டில்லும் சரி இந்தியா முழுதும் வாக்காளர்கள் மீண்டும் இதே கட்சிகளுக்கு வோட்டை கொடுத்து சாசனத்தில் அமர்த்துவதுமில்லாமல் இவர்களை பூஜிக்கிறது அறியாமையும் தீமையை ஆதரிப்பதையும்  தெளிவாகிறது. 

 அரசியலொரு விளையாட்டு போட்டியாகவும் நாடகமாகவும்  இருக்கையில், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிரமுகர்கள் (பெர்சநாலிட்டி) நியமிக்கப்படுவது  சகஜமாகியுள்ளது. 

தெய்வ. வழிபாடு  குறைந்து  பிரபல மனிதர்களை  பூஜை செய்யும்  வினோதமான வழக்கத்தை  இந்த கலியுகத்தில் காண முடிகிறது.

தமிழ் நாடும் அதே மாதிரி  பாரதம்  பூராவும் வருமான வரியை பொய் கணக்கு வழியாக  ஆட்சியில் இருப்பவர்கள்  சூரையாடுவது  சர்வ சாதாரணம்.  இந்த  ஊழல்கள் மூலம்  பணம்  அபகரித்ததையொற்றி  நாட்டிற்கு சேதமாகிறது.   இதை வேரோடு  நீக்குவதுதான் வழி.

ஆனால் ஆட்சியில் உள்ளவர்களுக்கு வேற உத்தேசம்.  அவர்கள் தன்னையும் தன்னைப்போல் இருப்பவர்களையும் பாதுகாப்பது பரம தர்மமாகக் கருதி  செயல் படுகிறார்கள்.

பொது மக்களுக்கு இந்த விஷயங்களை  தெரிவித்தால், குற்றவாளிகளை தண்டிக்காமல் யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்களையும், இதை அறிவிப்பவர்களையும்  குற்றம் சாட்டுவது தான் ஆட்சியின் கடமையாகியுள்ளது.

முடிவினில் தமிழ் நாடும் பாரதமும் தற்போதுள்ள தந்திரமான அரசியல் அமைப்பு – ஆட்சி புரிபவர்களும் அடுத்து அந்நியர்களின்  நலனிற்காகவே ஏற்ப்படுத்திய இந்த சீரழிவான ஸ்தாபனத்தை நிராகரித்து அதற்கு மாறாக நீதி, நியாயம், நேர்மை, பண்பாடு, மனிதாபிமானம், சம உரிமை போன்ற கொள்கைகளை கடைப்பிடிக்கும் புது  ஆட்சியை மக்களின் சேவைக்காக தயாரிப்பதில்தான்  எல்லாவற்றில்லும் சிறந்ததாகும்.

மக்கள் கவனம் தேவை  – முக்கியமாக பதவி, பொருள், புகழ் மோகம் கொண்டவர்களின் சுயரூபம்  எந்த வேடம் போட்டாலும் அது தானாகவே பிரதிபலிக்கும்.

குடி மக்களின் குடியை கெடுக்கும் ஆட்சி எந்த வகையிலும் குடியரசு ஆவதில்லை.

 இந்த சொற்பொழிவுடன் தமிழ் நாடும், பாரதம் மற்ற உலக  மக்களக்கு –  என் நல் வாழ்த்துக்கள். நன்றி.

அனைவருக்கும் அமைதி உரிதாகுக

ஜெய் பாரதம்

இப்படிக்கு,

பத்மினி அர்ஹந்த்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தியா, தமிழ் நாடு – பொங்கல் திரு நாள் 2015

January 14, 2015

 

பத்மினி அர்ஹந்த்

வணக்கம்.

பொங்கல் திரு நாள்

தமிழ் நாட்டின் குடி மக்கள் முக்கியமாக விவசாயிகளுக்கு இன்றய தினம்  தை பொங்கல் திரு நாளையொற்றி  என் நல் வாழ்த்துகள்.

விவசாயம் செழிப்பம், வளர்ச்சி மற்றும் எல்லா வகையில் குறையின்றி தமிழ் நாடு உட்பட அகில பாரத தேசத்திற்கு உணவு உற்பத்தியாக இறைவனின் அருள் பெற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

ஜெய் பாரதம்!

இப்படிக்கு,

பத்மினி அர்ஹந்த்