இந்தியா – ஆபாச அரசியல் (Vulgar Politics)

May 8, 2023

ஆபாச அரசியல்

Vulgar Politics 

பத்மினி அர்ஹந்த்

அரசியலின் அசிங்கம் – தன் அராஜகம் வெளியான பிறகு அரசின் முகத்தில் வாத்து அல்லது கோழியின் அழுகிய முட்டை விழும் பொழுது தன்னை காப்பாற்ற வழியின்றி தகுதியற்ற நிலயில் கிடக்கும் போது அரசியல் அரசியலின் ஊடகம், சினெமா என்ற சின்ன வீடுகள் மூலம் செயல் படுவது எப்படியென்றால் அது இவ்வாறு ஆகும்.

இவர்கள் யாரை மறைமுகமாக குறி வைக்கிறார்களோ அந்த நபரை – அவதூராக தூற்றுதல், தன்னுடைய அவமானமான குணாதிசயங்களை காண்பித்தல்…

இப்படி செயல் பட்டு தன்னைத் தானே கழுசடை என்பதை இவர்களே நிரூபிப்பது தான் இவர்களின் பிழைப்பு.

தற்சமயம் உலகத்தை ஆட்டி படைக்கும் அநீதி குழுவின் அரசியலுக்கு அடிமையான அரசியல் – பெண் குலத்தை இழிவு செய்வதே தனது ஆதிக்கமாக கருதி பெண் என்றால் விபச்சாரம் என்ற பிரச்சாரம் செய்வது இவர்களே இவர்களை விளம்பரம் செய்வது இவர்களுக்கு தெரியவில்லை.

விபச்சாரத்தைப் பற்றி அரசியலுக்கு தெரியாமல் பிறர் யாருக்கு தெரியப் போகுது.

அரசியலை வியாபாரமாக்கி, மாநில சட்ட சபை, பாராளுமன்ற சபை MLA, MP இவர்களை போனி செய்து, ஒவ்வொருவருக்கும் அவரவர் ரகத்தின்படி விலை பேசி யார் எவ்வளவு தொகை கொடுக்கிறார்களோ அவர்களோடு உல்லாசமாக இணைந்து விட்டு அடுத்த தேர்தலில் மற்ற கட்சி கூட்டணி என்று நாடு முழுக்க அலைவது தானே அரசியலின் பாணி.

அப்புறம் முக்கியமாக தொழில் அதிபர்களுடன் படுத்து உருண்டு பிரண்டு உறவு கொண்டாடி தன் உடல், ஆன்மாவை விற்பனை செய்வதோடு நிற்காமல் நாட்டையும், நாட்டின் பொருளாதாரத்தையும் தொழில் அதிபரிடம் தாரைவார்ப்பது. 

காசை வீசினால் நாலு வேசி என்பதை இவர்கள் தானே தன் மோசமான நடத்தை வழியே காட்டுவதில் சிறிதும் சலைப்பதில்லை. 

மற்றபடி நாட்டை ஆக்கிரமிப்பாளர் அதாவது நாட்டின் பக்கத்திலுள்ள பரம எதிரியிடம் நாட்டின் பகுதிகளை முழுமையாக சமர்பித்து தன் அரசியல் வியாபாரம் என்ற விபச்சாரத்தில் வல்லவர்கள் ஆகிய இவர்கள் இந்த விபச்சாரத் தொழிலில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. 

மற்றவரோடு பேரம் பேசி அப்படியே தன் அரசியலை காலம் காலமாக கடத்தி செல்வது தானே அரசியலின் வரலாறு.

அப்படி இருக்கையில் அரசியலை வியாபாரம் விபச்சாரமாக செயல் படுவது தானே இவர்களின் நிபுணத்துவம் திறமை. இதில் இவர்களை யாரும் வெல்ல இயலாது. 

இப்படிக்கு,

பத்மினி அர்ஹந்த் 

PadminiArhant.com

Prakrithi.PadminiArhant.com

Comments

Got something to say?

You must be logged in to post a comment.