தஞ்சை பெருவுடையார் (பெரிய கோவில்) குடமுழுக்கு திருவிழா

January 30, 2020

தஞ்சை பெருவுடையார் (பெரிய கோவில்) குடமுழுக்கு திருவிழா

பத்மினி அர்ஹந்த்

Thanjavur Peruvudaiyar Kovil

தஞ்சாவூர் பெருவுடையார்

கோவில்

 

 

Thanjavur Peruvudaiyar SivaLingam

தஞ்சாவூர் பெருவுடையார்

கோவில்

சிவலிங்கம்

🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

தமிழகத்திற்கு என் அன்பார்ந்த வணக்கம்!

தமிழ் மாமன்னன் ராஜ ராஜ சோழன் முன்னோர்கள் ஆரம்பித்த தேவாலயம் தமிழ் கடவுள் ஆதி இறைவன் சிவபெருமான் கோவிலை செழிப்பம் நிறைந்த தஞ்சையில் பெருவுடையார்(பெரிய கோவிலென்று) அழைக்கப்படும் சிவன் கோவிலைமுடித்து வைத்த அந்த தமிழ் பேரரசன் ராஜ ராஜ சோழன்ஆட்சியின் வல்லவரான காவேரி ஆற்றின் கரை 11ஆம் சித்தர் கருவூரார் வகுத்த திருமுறைகள் நெறி குடமுழுக்கு சடங்குகள் தமிழ் வழிபாடுகள் படி இந்த பிப்ரவரி ஐந்தாம் தேதி நடை பெறவிருக்க குடமுழுக்கு விழாதமிழ் மொழியிலேயே அதாவது தமிழ் மொழியில் மட்டுமே சிறப்பாக செய்து அந்த பிரபலமான புண்ணிய தெய்வ ஸ்தலத்தை வணங்கும்படி பெருமை மற்றும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இதுதான் ஆதி தேவன் சிவனின் விருப்பமாகும்.

மற்றபடி ஆகமம் தான் பெரிய கோவிலில் நிலைக்க வேண்டுமென்று ஊடகம் நடத்தும் சர்ச்சைகளில் விவாதிக்கும் சந்ததிகள் முன் வைக்கும் கருத்து – சமஸ்க்ரிதத்திலிருக்கும் சக்தி தமிழ் மந்திரத்திலில்லை என்று அடித்து கூறுகிறார்கள். அவர்களின் அறியாமைக்கு பதில் இந்த தமிழ் ஓம் என்ற பிரணவ மந்திரம் அதன் அமைப்பு மற்றும் உச்சாரம் மனிதனின் மூளை உறுப்பகள் ஒவ்வொரு உறுப்பின் செயல்களை கூர்மையாக தெளிவு படுத்துகிறது.

Courtesy – Instagram

இது ஒன்று மட்டுமே போதும் தமிழர்களின் அறிவு ஆற்றல் திறன் ஆகியவைகளுக்கு ஆதாரம். மேற்கொண்டு இதற்கும் மேல் அதிரவைக்கும் தமிழ் அறிவையும் திறமையையும் காவேரி ஆற்றின் கரை 11ஆம் சித்தர் கருவூரார் போன்ற மகா வல்லவர்கள் சாதித்திருக்கிறார்கள். 1010 வருட காலத்தின் பின்பும் கம்பீரமாக நிற்கும் பெரிய கோவில் ஒரு உதாரணம்.

ஆகையால் தமிழையோ அல்லது தமிழின் அருமையையோ நிராகரிப்பது மனித குலத்த்தின் மிகப் பெரிய அவதூராகும். இதன் விளைவு பெரிய கோவில் சம்பவங்கள் அதோடு நிகழ் காலம் நிகழ்ச்சி பொருளாதார அவஸ்தைகளில் காணலாம்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் அறம் கலாச்சாரம் பண்பாடு!

ஓம் நமச்சிவாய ஓம்!

தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!

🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

நன்றி

வணக்கம்

இப்படிக்கு

பத்மினி அர்ஹந்த்

பொங்கல் நல் வாழ்த்துக்கள்! தமிழ் தேசியம் 

January 14, 2019

பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

பத்மினி அர்ஹந்த்

தமிழ் நாட்டின் விவசாயிகள் மற்றும் தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திரு நாளையொற்றி அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

அகில இந்தியாவில் ஏழை விவசாயிகளின் துயரங்கள் நீங்கி அவர்களுக்கு நல்ல அறுவடை, மழை, வளர்ச்சி, பொருளாதார நிலைமை உருவாக இறைவனின் ஆசி பெற வேண்டுகிறேன்.

நன்றி

வணக்கம்

பத்மினி அர்ஹந்த்

———————————————————

தமிழ் தேசியம் 

பத்மினி அர்ஹந்த்

தமிழ் தேசியம்  என்ற பிரச்சாரம் தமிழ் நாட்டிற்கும் சகல மக்களுக்கும் பெரிய தீமையை உருவாக்கும். அதன் பிரதிநிதி நோக்கம் ஏறு மாறாக இருக்கும் பட்சத்தில் இவ்வகை கொள்கை மற்றும் சிந்தனைகள் தமிழ் இனத்திற்கும் இந்தியாவிற்கும் பாதகமாகும். முக்கியமாக இவ்வாறு பிரச்சாரம் செய்பவர்களின் செயல்களையும் முரண் பாடாகயிருக்கும் அவர்களின் கருத்துக்களையும் நன்றாக பரிசீலம் அதாவது கூர்ந்து ஆய்வு செய்வது அவசியம். ஏனென்றால் இப்படி சமூதாயத்தைப் பிரிப்பவர்கள் தீய உறுப்பினர்களின் தூதுவர்கள் ஆயினும் தீயவர்களை விமர்சனம் செய்வது போல் நடித்து அவர்களின் சேவகர்களாகவும் அடிமையாகவும் இருப்பவர்கள்.

இவர்களின் பேச்சில் எதிர் மாறாக கூறிய விஷயங்கள் இவர்களின் சுய ரூபத்தை காண்பிப்பது இவர்களுக்கே தெரியவில்லை. இது தீங்கு செய்யும் நபர்களின் கோரிக்கை ஆயினும் இவ்வாறு இழைஞரை பணம் புகழ் என்ற போதையில் மயங்க வைத்து மக்கள், நாடு, தேசம் பார்க்கப் போனால் உலகத்தையே ஏமாற்றும் சதிகார கும்பலைச் சேர்ந்தவர்கள். இவர்களின் கெட்ட எண்ணம் இவர்களை பாதிக்கும்.

தன் இழிவை நோக்கி செல்லும் வேகத்தில் சமுதாயத்தில் பிரிவு ஏற்படுத்துவது இவர்களுக்கு ஒரு பெரிய சாதனையென்று நினைப்பு. தீயவர்களின் அழிவு காலம் நெருங்கிய கட்டத்தில் தற்ச்சமயம் யாரையும் தனது வசப்படுத்தி அவர்களின் குறுகிய மனப்பான்மை வேறுபாட்டை சமத்துவம் என்று நாடகம் போடும் பாணி இவரின் ஏற்ற தாழ்வு கொள்கையையும் செயலையும் நிரூபிக்கிறது.

தன் ஜாதியை பெயருடன் குறிப்பிட்டு அதே மூச்சில் ஜாதியை ஒழிப்பது பற்றி பேசுவது இத்தகைய நபரின் போலி வேடத்தை பொது மத்தியில் காணப்படுகிறது. கலி காலத்தில் காசை வீசினால் நூறு வேசி. அதே போல் இந்த மாதிரி இழைஞர் மற்றும் இந்திய திரையுலகம், சில பிரபல திரையுலக நபர்கள் அயோக்கியர்களின் துர் விவகார சாதனமாக உதவுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் தீய குறிக்கோள் தோல்வியைத்தான் வழங்கும். அதோடு மக்கள், நாடு, தேசத்திற்கு துரோகம் செய்பவர்களின் கெதி என்னவென்று வரலாறு சாட்சியாகும். அறிவுள்ளவர்கள் நேர்மையானவர்கள் கல்லம், கபடம், வஞ்சகம், சூழ்ச்சி ஆகியவையில் ஈடுபடுவதில்லை. முக்கியமாக தன் மனசாட்சிக்கு விரோதமாகவும் செயல்படுவதில்லை.

பித்தளையை எவ்வளுவு பளபளப்பாக்கினாலும் அது  தங்கமாகாது. பித்தளை பித்தளைத்தான் தங்கம் தங்கமே.

தமிழ் தேசியம் என்பது அழிந்து கொண்டிருக்கும் இலுமினாட்டி தத்துவத்தின் தூறலாகும். இத்தகை வேண்டா விவாதங்களை கிளப்புவர்கள் படு முட்டாள் மற்றும் சுய நலவாதிகள். பிறருக்கு மோசடி கெடுதல் செய்பவர்கள் நிலைமை அவரவரின் கேடு காலத்தின் அறிகுறியாகும்.

இந்தியாவில் தற்போது தன் சுதந்திரத்தை பயன் படுத்துகிறவர்கள் தேசிய கொடியோ இல்லை பாடல் அதை விட்டால் வந்தே மாதரம், பாரத மாதா கி ஜெய் என்ற பழக்கத்தை வற்புறுத்துவது சரியல்ல என்ற மனப்பான்மை உள்ளவர்கள், அதே போல் என் விருப்பத்தையோ அல்லது மறுப்பை ஏற்றுக் கொள்வதில்லை. அப்படி என்றால் அவர்களுக்கு ஒரு நியாயம் உள்ளது எனக்கு அது கிட்டாதென்று அவர்கள் செயலில் காணலாம்.

நான் பல முறை கூறிய வாக்கை அதாவது எனக்கும் திரையுலகம், விளையாட்டு, பொழுது போக்கு, அரசியல் பேர்வழிகளுடன் மற்றும் எவரோடும் எந்த சம்பந்தம் தொடர்பில்லை என்பதை நிராகரித்து வேண்டுமென்றே இலுமினாட்டியின் அடிமைகள் என்னை அதே தோரணையில் காண்பிப்பது அவர்கள் அந்நியர்களுக்கு அடிமை என்பதை வெளிப்படுத்துகிறது.

இது இலுமினாட்டி குழு நடத்தும் நாடகம். இதில் பங்கேற்றுபவர்களின் முடிவு காலம் உறுதி. யாரொருவர் பிறரின் சுய உரிமை உணர்வுகளை அலட்சியம் செய்கிறார்களோ அவர்கள் மனித குலத்தைச் சேர்ந்தவர்களல்ல. அதே போல் இலுமினாட்டி போன்ற தீய சீரழிந்த கூட்டணியும் அவர்களுக்கு கட்டுப்பட்டு ஒடுங்கி நடக்கும் எந்த அரசும் உண்மையை பேசி நீதி நியாயத்தை கேட்பவர்களை துன்புறுத்துவது ஒரு கோழைத்தனம் மற்றுமில்லம்மாள் சர்வாதிகாரமாகிறது.

எல்லாவற்றுக்கும் முற்று புள்ளியுள்ளது. முக்கியமாக இந்த அநியாயம் அட்டூழியத்திற்கும் முடிவு வந்து விட்டது. இதை யாராலும் தவிர்க்க முடியாது. இது சத்தியம்.

தன் கர்ம வினைகளிலிருந்து யாரும் தப்ப முடியாது. அவரவர் கர்ம பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். இதுதான் இயற்கையின் நீதி. இதில் ஆண்டவன் கூட தலையிட இயலாது. இதை அறிந்தவர்கள் அதன்படி தன் பிறவியை வீண் போகாமல் தனது ஆத்மாவின் விமோச்சனத்திற்க்காக யாருக்கும் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்ய தயங்குவார்கள்.

இவர்கள் அறிய வேண்டியது – தன்னப்பன் தன்னைச் சுடும் உரட்டியப்பன் வீட்டைச் சுடும்.

இப்படிக்கு

பத்மினி அர்ஹந்த்
எழுத்தாளர், தொகுப்பாளர்
பத்மினிஅர்ஹந்த்.காம்
ப்ரக்ரிதி.பத்மினிஅர்ஹந்த்.காம்

அரசியல் புதிர் – Political Conundrum

August 12, 2016

எழுத்தாளர், ஆசிரியை மற்றும் தொகுப்பாளர்,

பத்மினி அர்ஹந்த்

வணக்கம்.

தமிழர்கள் உட்பட உலகத்தின் குடி மக்கள் எல்லோருக்கும் சில விஷயங்கள் பற்றி என் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். தற்கால உலக சூழ்நிலை சாதாரண மக்களுக்கு அதிக வாய்ப்பு இல்லாத பட்சத்தில் வறுமையும் நிறைய துன்பங்களையும் அவர்கள் சகித்து கொண்டிருக்கின்றனர். இதே மாதிரி மத்திய வருமான உறுப்பினரும் அவதிப் படுகின்றனர். அரசு மக்களின் பிரச்சனைகளை முழுமையாக தீர்க்காவிட்டாலும் அதை குறைப்பதற்கு வழியை தேடலாம். ஆனால் அதற்கு அக்கறையும் ஆலோசனையும் தேவை. இது இரண்டும் காணவில்லை. காரணம் – அரசாட்சியில் தலைமை புரிபவர்கள் இதை முக்கியமாகக் கருதுவதில்லை.

உதாரணமாக – பாரதத்தின் தமிழ் நாட்டில் மக்கள் அவதி பெரிதாகினும் முதல் அமைச்சர் தன் கட்சியின் விவகாரங்களை கண்காணிக்கவும் கட்சியிலுள்ள அதிபர்களை விளக்கவும் தண்டிக்கவும் நேரம் சரியாகிறது. இந்த சம்பவங்கள் கட்சியின் அலுவலகத்தில் வைத்து கொண்டாலும் ஒரு பக்கத்தில் இது அரசியல்வாதிகளின் குடும்ப பிரச்சினை என்று போய் விடும். ஆனால் இதை பிரசங்கம் செய்து நாடாளும் மன்றத்தில் நாடகம் நடப்பதில் மும்மரமாகியுள்ளார்.

திரை உலகத்திருந்து அரசியலுக்கு வந்ததினாலோ படம் காட்டும் பழக்கம் முத்திப்போனதில் ஆச்சரியமில்லை. மாநிலத்தின் நிலமையோ அல்லது பொது மக்களின் வேண்டிய வசதிகளைக் கவனிப்பதற்கு இவர்கள் கையில் ரொக்கத்தை திணித்தால்தான் எதுவும் நடக்கும். இவர்களுக்கு மீண்டும் மீண்டும் வோட்டை போட்டு சிம்மாசனத்தில் அமர்த்தி வைக்கும் பாமர மக்களும் நகரத்தில் வசிக்கும் செல்வந்தர்களும் அவர்களுடைய சுயநலன் நீடிக்க இந்த மாதிரி ஊழலில் மூழ்கிய பேர்வழிகளை ஆண்டாண்டு காலம் பதவியில் உட்கார அனுமதிப்பதால் மற்றவர்களுக்கு மிகுந்த அல்லல் அவஸ்தை உருவாகியுள்ளது.

இந்த கட்சியைத் தவறினால் எதிர்க் கட்சி இவர்களின் இராட்டை சகோதரர்.

இந்த நிலமை தமிழ் நாடு மற்றபடி எங்குமே தர்ம சங்கடமாகியுள்ளது. திரை உலகம், செய்தி, பத்திரிக்கை, வானொலி, டெலிவிஷன் யாவும் இவர்களின் கைவசம். இவர்களை புகழ்வதும், வாழ்த்துவதும் ஆக மொத்தம் இவர்களின் கவசமாகியுள்ளார்கள்.

உண்மையை மறைத்து பொய்யை மெய்யாக்குவது சூடான சாம்பார் சாதத்தில் நெய் விட்டது போல் ஆகி விடுகிறது. இவர்களுக்கு இது சர்வ சாதாரணம். செய்தி நிலையங்கள், திரைப்படம் ஆகியவைகள் மக்களின் குரலை நிராகரித்து அரசியலின் யந்திரமாக இருப்பினும், உண்மையை பேரம் பேசி விலைக்கு வாங்கி விடுகின்றனர்.

விலை வாசி புயல் போல் படர்ந்து வானத்தைத் தொட்டாலும், அது மக்கள் விதியாகிவிடுகிறது.

தமிழ் நாடு திரை உலகம் மற்ற நாட்டில் தமிழர்களின் கீழான ஸ்தானத்தையும், குறைகள், வேறுபாடு என்ற பல விதமான கஷ்டங்களை இந்தியாவிற்கும் உலகத்திற்கும் உணரவைப்பது பெருமையாக இருந்தாலும், தமிழ் நாட்டில் வாழும் குடி மக்கள் குடி நீர் இல்லாமல், வசிக்க இடமில்லாமல், மாணவர்கள் படித்து பட்டதாரி ஆகியும் வேலைக் கிடைப்பது குதிரை கொம்பாக இருப்பதை செய்தி, பத்திரிக்கை, டெலிவிஷன், திரைப்படம் என்ற பிரபல மையங்கள் மூலம் அரசியல் நிபுணர்கள், அறிஞர், மற்றும் கலைஞர் ஆகியோர்க்கு எடுத்து உரைத்தால் அது நிலவரத்தைக் கொஞ்சம் சீர் திருத்தலாம். ஆனால் இது நடக்கிற விஷயமில்லை.

நான் மேல் பகுதியில் கூறியது போல், தொடர்பு ஊடகங்கள் (Communication Media) ஊழல்வாதிகளுக்குச் சங்கு ஊதுவது அவர்களுக்கு சாதகமாகியுள்ளது. தமிழ் நாட்டில் சமீபத்தில் மூலைக்கு மூலை குடி நீருக்குப் பதில் மதுக் கடைகள் டாஸ்மாக் என்ற முறையில் குடியை கெடுக்கும் குடி பழக்கத்தைப் பரவிய அரசியல் கட்சிக்கு மக்களின் எதிர்ப்பு எந்த மாறுதலையும் தரவில்லை. அதற்கு ஏறு மாறாக மீண்டும் அந்தக் கட்சியும் அதன் தலைவியையும் திரும்ப ஆட்சிக்குக் கொண்டு வந்தது குடி அரசின் மிக பெரியத் தோல்வியாகும்.

மற்ற கட்சிகளும் இந்த வகையில் ஒன்றுதான். இந்த சீர் குழைந்த சிக்கல்களை நான் எடுத்துக் கூறினால், அவர்கள் தன்னிடமிருக்கும் பிரச்சார ஆயுதம் அதாவது மீடியா வழியாக தாக்குவதில் திறமை வாய்ந்துள்ளார்கள். தன்னைக் காப்பாற்றவும், தன் பதவியைப் பாதுகாப்பதும்தான் அவசியமாகியுள்ளது.

இது தமிழ் நாடு மற்றுமில்லை, இந்தியாவிலும், உலக பகுதிகளில் நடந்து வரும் அரசியல் வழக்கமாகி விட்டது. ஆனால் தமிழ் நாடு அரசியல் தரம் கெட்டு, மதி இழந்து குடி மக்களை குடி பழக்கத்தில் திசை மாற்றியது மனித குலத்திற்குத் தீங்கும் இழப்பையும் ஏற்றியுள்ளது. இதையெல்லாம் விட இவர்களை தட்டிக் கேட்பதில்லாமல், இவர்களுக்கு பூமாலை சூடி இவர்கள் படத்திற்கு முன்னாள் திருஷ்டிக் கழிப்பது மனித மூடத்தனம், பலஹீனம் தெளிவாகிறது.

கண் விழித்திருந்தும் பாதைத் தவறினால், அது மூலை உபயோகத்தில் குறையாகும்.

இத்துடன் இந்த சங்கதி முடிகிறது.

என்னிடமிருந்து மக்கள் சமுதாயம் சம்பந்த சர்ச்சை உங்கள் முன்னாள் விரைவில் காணலாம்.

மீண்டும் தொடர்பு கூடிய சிக்கிரமாகும்.

எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இப்படிக்கு,

பத்மினி அர்ஹந்த்

 

Spiritual Event – மகாசிவராத்திரி, महाशिवरात्रि, MahaShivaratri – 2016

March 6, 2016

By Padmini Arhant

மகாசிவராத்திரி திருநாள்!

மகாசிவராத்திரி திருநாளையொற்றி சிவ பக்தர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

பரப்ர்ஹமன், பரமாத்மன் பரமேஷ்வர் அருளால் சகல துயரங்கள், பாவம், அறியாமை ஆகியவைகள் நீங்கி, ஞானம், பக்தி மற்றும் மனிதத்தன்மை, அமைதி உருவாக இந்த சுப தினம் வாய்ப்பு அளிக்கிறது.

சிவபெருமானை துதித்து ஆசியை அடைவதற்க்கு தூய மனம், நன் செயல், பரந்த மனப்பான்மை தேவை. இது ஏற்படுவதற்கு இறைவன் வழி காண்பிக்க இது ஒரு சந்தர்ப்பம்.

இந்த கலியுகத்தில் நடந்து வருகிற அநியாயம், அட்டுழியம், அபராதங்கள் காரணத்தினால் கடவுள் படைத்த இந்த உலகம் பாவ கடலில் மூழ்கி கிடக்கிறது. இதன் விமோச்சனம் மனித குலம் தன் தவுறுகளை உணர்ந்து அதன்படி பொறுப்பு ஏற்றுக்கொண்டு தண்டனையை பணிவுடன் மதிப்பது முதல் கடமையாகும். பிறகு தன் ஆணவம், அஹங்காரம், அபிமானத்திளிருந்து விடுதி பெற வேண்டும்.

எவரும் தன் கரும வினைகளை தவிர்க்க முடியாது. இது இயற்க்கையின் நீதி.

ஈசன் மன்னிப்புக்கும் தகுதி அவசியம். இது மானிடம் அறிய வேண்டும்.

பூலோகத்தில் நடக்கிற ஏறுமாறான நீதி வழக்குகள் அதன் தீர்ப்புகள் மாதிரி அல்ல. குற்றவாளிகளை அரசியல், சமூதாயம் என்று பதவியில் வைத்து அவர்களை பூஜிக்கவும், மதிக்கவும் செய்யும் பாரம்பரியம் பாவத்தை அதிகரித்து, புண்ணியம், நேர்மை இவைகளை நிராகரிக்கிறது.

கலியுகம் கூடிய சீக்கிரம் முடிய இறைவன் அனுக்ரஹம் அடைய வேண்டும். அதற்கு பிராயச்சித்தம், பிரார்ததனை மூலம் நல்ல எதிர்காலம் பிறப்பதற்கு முயற்சி செய்வது தான் நன்மை.

ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய,ஓம் நமசிவாய, சிவாய நம ஓம்!

நன்றி.

பத்மினி அர்ஹந்த்

———————————————————————————————-

महाशिवरात्रि शुभ पूजा

महाशिवरात्रि कि शुभ अवसर पर सभी शिव गण और शिव भक्तों को मेरी हार्दिक शुभ कामनाएं!

परब्रह्म, परमात्मन, परमेश्वर की कृपा से जीव, जंतु, प्राणी की पीड़ा, दोष, बुरे कर्म और पाप से मुक्ति प्राप्थ होता है.

ईश्वर की दया पाने के लिए शुद्ध मन और नेक व्यवहार आवश्यक है, जिसकी इस कलयुग में आकाल है.

भगवान शिव इस भूमि पर होरे रहे अघोर पाप, अनर्थ, हत्याचार, भ्र्ष्टाचार  एवं अन्याय को समाप्त करें और भूमा देवी, पावन नदियां और प्रकृति पर हो रहे आक्रमण का अंत हो.

छल, कपट और दुष्टता से भरपूर घटनायेन कलयुग के दृश्य है. सृष्टि के नियमों के अनुसार कलयुग का अंत अनिवार्य है और सभी को अपने कर्म के आगे जुकना होगा.

कर्म के फल से कोई मुक्त नहीं. अभिमान और अहंकार अज्ञान से उबरता है. समय करम दोनों मानव जात के लिए अपरिहार्य अवश्यंभावी है.
शिव करुणा से मानवता, सत्य, अहिंसा और भक्ति की प्रेरणा जागे.

ओम नामशिवाय, ओम नामशिवाय, ओम नामशिवाय, शिवाय नामा ओम!

शांति, देश भक्ति और एकता बड़े.

धन्यवाद.

पद्मिनी अरहंत

——————————————————————————————-

Best wishes and greetings to devotees of God Shiva on the auspicious occasion of MahaShivaratri.

May sentient beings suffering alleviated and ignorance dispelled with God Shiva’s grace and blessings for peaceful and enlightened existence.

None can escape karma. Redemption is possible through penance.  The soul burdened with sins could rest in peace and attain deliverance only upon atonement. 

OM NamaShivaya, OM NamaShivaya, OM NamaShivaya, Shivaya Nama Om!

Peace to all!

Thank you.

Padmini Arhant

—————————————————————————————————